கோரக்பூர் சம்பவம்: துரிதமாக போராடி எண்ணற்ற குழந்தைகளை காப்பாற்றிய மாமனிதர்

khகோரக்பூரில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டில் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் காபீல் கான் என்ற மருத்துவர் எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்றியதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

உத்தரபிரதேசம் கோரக்பூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் மிகவும் இக்கட்டான சூழ்நிலையின் போது, மருத்துவர் காபீல் கான் துரிதமாக செயல்பட்டு எண்ணற்ற குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றியுள்ளார்.

தடையில்லா ஆக்ஜிஸன் சப்ளை மட்டுமே பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உயிர்காக்கும் மருத்துவம் என தெரிந்த மருத்துவர் காபீல் கான், தன்னுடைய காரில் அவருடைய நண்பர் நடத்தும் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்து மூன்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கடனாக பெற்று உடனடியாக மருத்துவமனை திரும்பியுள்ளார்.

எனினும், இதனால் குறைந்த நேரம் மட்டுமே பலன் அளிக்கும் என்ற நிலையில் அடுத்தக்கட்டமாக தனக்கு தெரிந்த மருத்துவமனைகளுக்கு சென்று 12 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சேகரித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

பின்னர், தன்னுடைய சொந்த பணத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கிவருமாறு ஊழியர்களிடம் கொடுத்துள்ளார். இக்கட்டான சூழ்நிலையில் போராடிய காபீல் கான் பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றி அசத்தியுள்ளார்.

காபீல் கான் மட்டும் சரியான நேரத்தில் துரிதமாக பணியை செய்யவில்லை என்றால் 48 மணி நேரத்தில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கையானது அதிகமாகியிருக்கும் என கூறப்படுகிறது.

-lankasri.com

TAGS: