எந்தவொரு சவாலையும் சந்திக்கிற தகுதியை இந்தியா பெற்றிருக்கிறது – பிரதமர் மோடி

modi-singaporeஇந்தியாவின் 71-வது சுதந்திர தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 4-வது ஆண்டாக மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார். டெல்லியில் தேசிய கொடியை ஏற்று வைத்து குண்டு துளைக்காத மேடையில் நின்றபடி நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி பேசுகையில், நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறோம். உள்நாட்டு பாதுகாப்புக்கு எங்களுடைய முன்னுரிமை. எல்லா வகையிலும் நாட்டை தற்காத்துக்கொள்கிற திறனைப் பெற்றிருக்கிறோம்.

தரை மார்க்கமாக, கடல் வழியாக, இணையதளம் மூலம் வருகிற எந்தவொரு சவாலையும் சந்திக்கிற தகுதியை இந்தியா பெற்றிருக்கிறது என குறிப்பிட்டார்.

சிக்கிம் செக்டாரில் டோக்லாமில் இந்தியா – சீன ராணுவம் இடையே கடந்த இரண்டு மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் பிரதமர் மோடி, சீனாவின் பெயரை குறிப்பிடாமல் எந்தவொரு சவாலையும் சந்திக்கிற தகுதியை இந்தியா பெற்றிருக்கிறது என குறிப்பிட்டு உள்ளார்.

பிரதமர் மோடி பயங்கரவாதம் மீது மென்மையான போக்கு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது எனவும் உறுதிபட தெரிவித்தார்.

-dailythanthi.com

TAGS: