உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் என்.ஐ.ஏ அலுவலக கட்டிடத்தை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
2009-ல் தொடங்கப்பட்ட என்.ஐ.ஏ நம்பகமான நிறுவனமாக வெற்றிக்கரமாக செயல்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாத பிரச்சனை 75 சதவீதமும், நக்சலைட் பிரச்சனை 40 சதவீதமும் குறைந்துள்ளது. காஷ்மீரில் என்.ஐ.ஏ., செயல்பாடு காரணமாக கல்வீச்சு சம்பவங்கள் குறைந்துள்ளது.
கள்ளநோட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி கட்டுப்படுத்தும்போது பயங்கரவாதிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். இந்த விவகாரத்தில் என்.ஐ.ஏ., சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழக்கு தொடர்பான 165 வழக்குகளை என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகின்றது. பயங்கரவாதிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை நாம் அழித்தால் பயங்கரவாதம் முடிவுக்கு வரும் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
இந்த விழாவில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
-dailythanthi.com