மார்வாடி மக்கள் இந்தியாவின் கிழக்கு இராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த மார்வார் மக்கள் ஆவர். வறண்ட பாலைவனப் பகுதியைச் சேர்ந்த மார்வாடிகள் வணிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள், வளங்களைச் சிக்கனமாகச் சேமித்து வாழத் தெரிந்தவர்கள். இதனால் தான் மார்வாடிகளால் வணிக உலகில் விஸ்வரூபம் எடுக்க முடிந்தது.
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிடும் இந்திய பில்லியனர்களில் நான்கில் ஒரு பங்கு மார்வாடிகளே உள்ளனர். இவர்கள் கை வைக்காத தொழில் துறைகளும் இல்லை பதிக்காத முத்திரையும் இல்லை என்று சொல்லலாம். மார்வாடிகளின் ஆதிக்கத்தில் தான் இந்திய வணிகமே உள்ளது என்று கூடக் கூறலாம்.
மிகுந்த வறியவனாய் வந்த ஒரு மார்வாடி எவ்வாறு செல்வந்தன் ஆகிறான் என்பதை, ஆசிரியர் தாமஸ் டிம்பெர்க், “The Marwaris: From Jagat Seth to the Birlas” என்ற நூல் மூலமாக ஏழு ரகசியங்களை 50 ஆண்டுகளாக ஆராய்ந்து எழுதி உள்ளார்.
அவை என்னென்ன என்பதை நாமும் அறிந்து வணிகத்தில் வெற்றி பெறுவோம்.
1. பணத்தின் மதிப்பைக் காணுதல்
மார்வாடிகளின் வணிக நிறுவனங்கள் மற்றும் வணிகக் குழுக்களில் இரண்டு முக்கியச் செயல்பாடுகள் செயல்படுத்தப்படுகிறது. அவர்கள் நீண்ட கால அடிப்படையில் மிக உற்பத்தித் திறன் வாய்ந்த நிறுவனங்கள் எங்கு உள்ளதோ அங்கே முதலீடு செய்தல் மற்றும் நுண்ணிப்பாக நிதியைக் கண்காணித்தல் ஆகிய வழிமுறைத் திட்டமிடல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். எனினும், ஹர்ஷ் கோயங்கா மற்றும் குமார் மங்கலம் பிர்லா ஆகியோரின் வணிக உத்திகள் வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள புதுப்புது மாற்றங்களாகும்.
2. முதலாளிகளே ஆனாலும் தொடர்ந்து கண்காணித்துக் கொள்ளல்
வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் எனில், தன்னிடம் கொடுக்கப்பட்ட பணியை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில், பொருளாதார நடவடிக்கையின் கால நீட்டிப்பானது மட்டுப்படுத்த பட்டதாகிவிடும். தங்கள் எப்பொழுது, மாற்ற விளைவை ஏற்படுத்தும் முறையில் ஒரு செயலில் தலையிட வேண்டும் என்பதை நன்கு அறிவர். அதிக அளவில் முதலீடு செய்த தொழிலைப் பற்றி முற்றிலும் அறிந்தவராகவும் இருப்பர்.
இதனால் தங்களைச் சுற்றி இருக்கும் திருப்தியற்ற நிர்வாகிகளை மாற்றம் செய்வது அவர்களுக்கு எளிதாக உள்ளது. திறனற்ற நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருந்தன்மையாகத் தங்களின் நிலையிலிருந்து வெளியேறுகிறார்கள்.
3. திட்டமிடல் மற்றும் ஒரு குறிப்பிட்ட முறையைக் கையாளுதல்
நாம் சந்தேகமில்லாமல் உள்ளுணர்வோடு தெளிவான மாற்றத்தை கொண்டு வருவதே சரியான திட்டமிடல். எனினும் வணிக நிறுவனர்களின் பரிந்துரைத்த கருத்துக்களுக்காகவும் வாரிசுகளுக்காகவும் சில மாற்றங்களையும் கொண்டு வரலாம்.
4. முன்னணி விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியை இழக்கவிடாத அமைப்பு
வெற்றிகரமான தொழில் அதிபர்களைத் தங்கள் வியாபாரம் விரிவாக்கம் பெற வேண்டும் என்ற அடிப்படை குணாதிசயம் தான் இயக்கி வருகிறது. பல வடிவங்களில் விரிவாக்கம் வேண்டும் என அறிக்கைகளில் சுட்டிக் காட்டியிருப்பதைச் செயல்படுத்தவும் உறுதியாக இருக்கின்றனர்.
5. சரியான பெருநிறுவன கலாச்சாரத்தைக் கையாளுதல்
ஒரு நிறுவனம் அல்லது குழுமம் அதன் உரியச் சந்தை மற்றும் கால அளவுகளைக் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் மாற்றங்கள் அல்லது திருத்தங்களைக் கொண்டு வருவது மிகவும் கடினமான பணியாக விளங்கும். ஒரு பெருநிறுவனத்தின் கலாச்சாரம் என்பது குறிப்பாக, திறமையான மேலாளர்கள் மற்றும் எழுச்சியூட்டும் விசுவாசிகளைக் கொண்டது. மேலும் நிதி ஊக்கங்கள் கொடுப்பதால் மட்டுமே தொழிலாளர்களைக் கொண்டு உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும் என்பதைக் கையாளுவதும் பெருநிறுவனத்தின் கலாச்சாரம் ஆகும்.
6. பித்துகளைக் கண்டு அசர வேண்டாம்
நிர்வாகத்தின் தற்காலிக பித்துகளின் வாழ்வு காலமானது வெறும் ஆறே மாதங்களாகும். ஆகையால் இவர்களைக் கண்டு பயப்படத் தேவை இல்லை. வேலை நிறுத்தம் மற்றும் கவர்ச்சிகரமான கோட்பாடுகள் ஒரு நிறுவனத்தின் வெற்றியை ஒருபோதும் பாதிப்பதில்லை என அனுபவமிக்கவர்கள் மற்றும் வணிகப் பள்ளிகளில் உள்ள பேராசிரியர்கள் விளக்குகின்றனர். ஒரு பொறுப்புள்ள மேலாளர் தற்காலிக மற்றும் சோதனை முயற்சிகளாலும் தன் நிர்வாகத் திறனை அணுகுகிறார். பொதுவாக அவர், கிளர்ச்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என இரு தரப்பின் வாதங்களையும் கேட்டறிந்து, இரு தரப்பினருக்கும் பிரச்சனையை ஏற்படாத வகையில் சூழ்நிலையைக் கையாண்டு சரியான முடிவை எடுக்க வேண்டி உள்ளது.
7. புதிய வாய்ப்புகளைத் தவறவிடாதே
சில தொழில்கள் நமக்குப் படிப்பினைக் கற்றுக் கொடுக்கும் அனுபவ வணிகங்களாகத் திகழ்ந்திருக்கும். நிச்சயம் அதிலிருந்து நாம் நடப்பு அல்லது சூழல் பற்றிய உண்மையை அறிந்திருப்போம். உலகில் பழமையான பல குடும்பத் தொழில்கள் இருந்தன. அதில் சில வெற்றிகரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும், ஆனாலும் நிறையத் தோல்வியைச் சந்தித்து இருக்கும் ஏனெனில் அந்தந்த காலக் கட்டத்தில் கிடைத்த வாய்ப்புகளைத் தவறவிட்டதாலேயே தோல்வியைத் தழுவி இருக்கும்.