டெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் தேரா சச்சா ராம் ரஹீம் 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்தது உள்ளிட்ட பல சர்ச்சைகளின் உச்சமாக இருப்பவர்.
தேரா சச்சா சவுதா என்பது சீக்கிய ஆன்மீக இயக்கம். இதற்கு சீக்கிய மத தலைவர்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தேரா சச்சாவின் நிறுவனரான ராம் ரஹீமுக்கு பஞ்சாப், ஹரியானால் பெரும் ஆதரவு இருக்கிறது. வெளிநாடுகளிலும் சீடர்கள் இருக்கின்றனர்.
பலாத்காரம், கொலை புகார்கள்
ஆன்மீகவாதி, தொழிலதிபர், நடிகர் என பல முகங்களை வெளிப்படுத்தி வருபவர் ராம் ரஹீம். இவர் மீது 2002-ம் ஆண்டு முதலே பலாத்காரம், கொலை என ஏகப்பட்ட புகார்கள் அணி வகுத்து நிற்கின்றன.
ஆண்மை நீக்கம்
கடந்த 2014-ம் ஆண்டு ராம் ரஹீம்சிங், 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்தார் என ஒரு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, பக்தைகளை ஆண் சீடர்கள் பலாத்காரம் செய்துவிடக் கூடாது என்பதற்காக ஆண்மை நீக்கம் செய்தேன். நான் கூட ஆண்மை நீக்கம் செய்துள்ளேன் என பகிரங்கமாக கூறியிருந்தவர் ராம் ரஹீம்.
பலாத்கார வழக்கில் குற்றவாளி
தற்போது பக்தையை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இப்போது ராம் ரஹீம் முதன்மை குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் என அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது. ராம் ரஹீமுக்கான தண்டனை விவரம் திங்களன்று அறிவிக்கப்பட உள்ளது.
துணை ராணுவம் குவிப்பு
இதனிடையே ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடும் என்பதற்காக பஞ்சாப், ஹரியானாவில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அம்மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவுவதால் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.