அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்! கலவரத்தில் 30 பேர் பலி!

பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராம் குற்றவாளி என பஞ்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதனையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். சாமியார் கைது செய்யப்பட்டதை அடுத்து அரியானா, பஞ்சாப்பில் கலவரம் பெரும் வன்முறையாக வெடித்துள்ளது.

அரியானா – பஞ்சாப் மாநில கலவரத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 250 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதுமாத்திரமல்லாது ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.

கலவரக்காரர்கள் டெல்லியை நோக்கி முன்னேறி வரும் நிலையில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில், பஞ்ச்குலா வன்முறை சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அமைதி காக்க ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்.

மாநிலங்களில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்புநிலை திரும்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கும் பின்னணியும்

அரியானா மாநிலத்தில், பஞ்ச்குலா நகரத்தில் ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பின் தலைவராக கும்ரீத் ரஹிம்சிங் செயற்பட்டுவருகிறார்.

கும்ரீத் ரஹிம்சிங் மீது 2002-ம் ஆண்டு, பாலியல் வழக்குப் பதிவுசெய்ய அரியானா உயர் நீதிமன்றம் சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டது.

50 வயதுடைய கும்ரீத் தன்னுடைய பக்தர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கானது கடந்த 15 ஆண்டுகளாக நடந்துவருகிறது. இந்நிலையில் தான் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பின்படி, ராம் ரஹிம் குற்றவாளி தீர்ப்பளித்தது. எனினும் சாமியார் ராம் ரஹிம்க்கான தண்டனை விவரங்கள் குறித்து வருகிற 28-ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என பஞ்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இதனால், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் சாமியாரின் ஆதரவாளர்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.ஷ

பெரும் கலவரமாக மாறியுள்ள அந்தப் பகுதிகளுக்கு தற்பொழுது 144 தடையுத்தரவு போடப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

 -tamilwin.com
TAGS: