குண்டர் கும்பலின் தலைவன் சாமியார் ராம் ரஹீமை சுதந்திரமாக நடமாட அனுமதித்த பஞ்சாப், ஹரியானா அரசுகள்!

ram rahimசண்டிகர்: 36 பேரை படுகொலை செய்த ஒரு வன்முறை கும்பலின் தலைவனாகிய சாமியார் ராம் ரஹீம் சிங்கை பஞ்சாப், ஹரியானா அரசுகள் சுதந்திரமாக நடமாட விட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப், ஹரியானா அரசுகளை மிரட்டும் வகையில் தேரா சச்சா சவுதா என்கிற ஆன்மீக அமைப்பை நடத்தியவர் ராம் ரஹீம் சிங். மார்டன் சாமியாராக, நடிகராக, பாப் பாடகராக மக்களை வசியப்படுத்தியவர் ராம் ரஹீம் சிங்.

அரசுகள் மண்டியிட்டன

இவருக்கு திரண்ட கூட்டங்களைப் பார்த்து பஞ்சாப், ஹரியானா அரசுகள் மண்டியிட்டன. இதனால் ராம் ரஹீம் சிங் ஆசிரமங்கள் வன்முறை கும்பலின் கூடாரங்களாக, ஆயுத கிடங்குகளாக உருமாறின.

பஞ்ச்குலா வன்முறை

ராம் ரஹீம்சிங் வழக்கில் தீர்ப்பு வரும்; வன்முறை வெடிக்கும் என தெரிந்து விடுமுறை விட்டு போக்குவரத்தை ரத்து செய்த அரசுகள் இந்த கும்பலை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்தன. இதன்விளைவுதான் பஞ்ச்குலா நீதிமன்ற வளாகம் போர்க்களமானது.

36 பேர் பலி

பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன; வன்முறை கும்பல் சரமாரி கற்களை வீசியது; ஆயிரக்கணக்கான குண்டர்கள் நடத்திய இந்த அட்டூழிய வன்முறையில் 36 பேர் பலியாகினர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஆனால் ஹரியானா அரசு கை கட்டி வேடிக்கை பார்த்தது.

ஹரியானா உயர்நீதிமன்றம்

இதற்குதான் ஹரியானா உயர்நீதிமன்றம் மாநில அரசை வெளுத்து கட்டியிருக்கிறது. தேர்தல் காலங்களில் ராம் ரஹீம்சிங்கிடம் பெற்ற நன்கொடைக்காக அரசியல் கட்சிகளும் அரசுகளும் ஒரு குண்டர் கும்பலின் தலைவனிடம் கைகட்டி நின்றிருப்பது மாபெரும் வெட்கக் கேடாது! இதன் விளைவுதான் 36 மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்கிறது.

tamil.oneindia.com

TAGS: