காஞ்சீபுரம் மாவட்டத்தில் மழை நீர் கடலில் கலப்பதை தடுக்க பாலாற்றின் குறுக்கே 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும்

edapadi-palanasami455காஞ்சீபுரம் மாவட்டத்தில் மழைக்காலங்களில் வெள்ள நீர் பாலாறு வழியாக வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் பொருட்டு, பாலாற்றின் குறுக்கே, மதுராந்தகம் வட்டம், ஈசூர்–வள்ளிபுரம்; வாலாஜாபாத் வட்டம், வெங்குடி மற்றும் உள்ளாவூர்; திருக்கழுக்குன்றம் வட்டம், வாயலூர்; செங்கல்பட்டு வட்டம், பழவேலி மற்றும் பாலூர்; காஞ்சீபுரம் வட்டம், வெங்கடாபுரம் ஆகிய ஏழு இடங்களில் தடுப்பணைகள் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

திருக்கழுக்குன்றம் வட்டம், நல்லாத்தூர் கிராமத்தின் அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் வாயலூர் கிராமத்தின் அருகே நிலத்தடி நீர் மாசுபடாத வண்ணம் கடல்நீர் உள்புகாமல் தடுப்பதற்கு, தரைமட்ட தடுப்பணை கட்ட கோரிக்கை எழுந்துள்ளதால், விரிவான ஆய்வு மேற்கொண்டு தடுப்பணை கட்டுவதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காஞ்சீபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் ஏதுமின்மையால், இம்மாவட்ட மீனவ மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு, விழுப்புரம் மாவட்டம், கழிவேலி பக்கிங்காம் கால்வாயின் முகத்துவாரத்தில் இரு பக்கங்களிலும் ஆலம்பரி குப்பம் மற்றும் அழகன் குப்பத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.  இவ்வாறு அவர் பேசினார்.

-dailythanthi.com

TAGS: