இந்திய மாணவர்களுக்கு தரமான உலக கல்வியை தருகிறோம் என நீட் தேர்வை கொண்டு வந்த மத்திய அரசு இன்று தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி பயிலும் உரிமையை கண்கூடாக பறித்துள்ளது.
மத்திய, மாநில அரசாங்கங்களின் சுயநலமான அரசியலுக்கு மருத்துவக் கனவை 12 ஆண்டுகளாக சுமந்து வந்த அனிதா பலியாகியுள்ளார்.
ஒரு குடிமகன் இதைத்தான் சாப்பிட வேண்டும். ஒரு மாணவன் இந்த கல்வியைத் தான் படிக்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்தால் அது எப்படி ஜனநாயக அரசாக இருக்க முடியும்?
அரசாங்கம் வரையறை செய்த கல்வியை படித்து 1176 மதிப்பெண் எடுத்த மாணவிக்கு மருத்துவத் துறையில் இடம் இல்லை. கட் ஆஃபில் 196.5 மதிப்பெண்கள் பெற்றதற்கும் மதிப்பில்லை என்றால் வேறு யார் தான் தமிழகத்தில் மருத்துவத் துறையில் படிக்க வேண்டும்?
தாயார் இல்லாமல், கூலித் தொழிலாளியான தந்தையை கவனித்துக் கொண்டு கடுமையாக படித்த அனிதாவின் கனவு பொய்த்து உயிரை மாய்த்துக் கொண்டார் எனில் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு எந்த அரசு மீது நம்பிக்கை எழும்?
அனிதாவை தற்கொலைக்கு தூண்டி அவரது மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகள் மீது தமிழகம் மட்டுமின்றி உலகத் தமிழர்களும் இன்று கடுமையான வெறுப்பில் உள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் தான் குற்றவாளிகள் என்றால் இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளும் குற்றவாளிகள் தான்.
-tamilwin.com
கொலை என்று சொல்லி பிரச்சனையைத் திசை திருப்புவதும், பிறகு அது பற்றி தொலைக்காட்சியில் விவாதிப்பதும், பிறகு காவல்துறை ஒருவனைப் பிடித்து வந்து இவன் தான் கொலை செய்தான் என்று யாரோ ஒருவனை குற்றவாளி என்பதும் – இதெல்லாம் பா.ஜ.க. வுக்கும் அ.தி.மு.க. வுக்கும் சொல்லியாக கொடுக்க வேண்டும்?