பெங்களூரு மேயராக சம்பத்ராஜ் என்ற தமிழர் தேர்வு!

sambathrajபெங்களூரு: மேயராக திருநெல்வேலியைச் சேர்ந்த சம்பத் ராஜ் என்ற தமிழர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு பெருநகர மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்ததேர்தலில் வாக்களிக்க 266 பேர் தகுதி பெற்றனர்.

மேயர் தேர்தலில் காங்கிரஸ் – மதசார்பற்ற கூட்டணி சார்பில், சம்பத் ராஜ் என்ற தமிழர் போட்டியிட்டார். அவருக்கு சுயேட்சை வேட்பாளர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பத் ராஜ் 139 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, இவர் டிஜேஹள்ளி வார்டு கவுன்சிலராக 2 முறை வெற்றி பெற்றவர்.

திருநெல்வேலியை சேர்ந்த சம்பத் ராஜ், பெங்களூருவின் 51வது மேயராக பதவியேற்க உள்ளார். துணை மேயராக மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் பத்மாவதி நரசிம்மமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டாலும் நீண்டகாலமாக சம்பத்ராஜ் குடும்பத்தோடு வசித்து வருவது பெங்களூரில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை போல பெங்களூரில் 5 ஆண்டுகளுக்கு ஒரே மேயர் என்ற நடைமுறை கிடையாது. ஆண்டுக்கு ஒருமுறை மேயரும், துணை மேயரும் கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மாற்றப்படுவது வழக்கம்

tamil.oneindia.com

TAGS: