அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோதே ஆபத்தான கட்டத்தில் இருந்த ஜெயலலிதா: அறிக்கையில் அம்பலம்

Jayalalitha addresses the mediaசென்னை: ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோது அவரது ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது. அதேவேளையில் அவரது ரத்தத்தில் உள்ள ஆக்சிஸன் அளவு 48 சதவீதம் மட்டுமே இருந்தது.

காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு தொடர்பாக ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது நடந்தது என்ன என்பது குறித்தும் நோயாளியை பற்றிய அப்பல்லோ குறிப்புகளும் புதிய தலைமுறையின் களஆய்வில் கிடைத்துள்ளது.

இதில் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையின்படி அவரது ரத்த அழுத்தம் 140/70 ஆகும். அவரது இதய துடிப்பு 88 ஆகவும் இருந்தது. அவருக்கு காய்ச்சல் ஏதும் இல்லை. இருந்தாலும் அனுமதிக்கப்பட்ட 3 நாள்களுக்கு முன்னர் அவருக்கு காய்ச்சல் விட்டுவிட்டு இருந்தது.

அவரது உடலில் காயமோ அல்லது புண்களோ இல்லை. ரத்தத்தில் ஆக்சிஸனின் அளவு அவருக்கு 48 சதவீதம் மட்டுமே இருந்தது. பொதுவாக 98 முதல் 100 சதவீதம் வரை இருக்க வேண்டும். அவருக்கு தைராய்டு, நிமோனியா காய்ச்சல் இருந்ததாகவும் தெரிகிறது.

அவரது ரத்த சர்க்கரையின் அளவு 508 ஆக இருந்தது. அவர் அனுமதிக்கப்பட்டபோது அவர் பாதி சுயநினைவுடன் இருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

tamil.oneindia.com

 

TAGS: