புதுடெல்லி, பாகிஸ்தானின் தந்திரோபாய அணு ஆயுத விவகாரங்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப்படை தளபதி தனோவா, “எல்லையில் இலக்கை நிர்ணயம் செய்யவும், தாக்குதலை முன்னெடுக்கவும் இந்திய விமானப்படை வலிமையை கொண்டு உள்ளது,” என்றார்.
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ள இந்திய விமானப்படை தளபதி பிஎஸ் தனோவா, இந்திய அரசால் மீண்டும் ஒரு சர்ஜிக்கல் தாக்குதல் நடத்த முடிவு எடுக்கப்பட்டால், இந்திய விமானப்படையால் பாகிஸ்தானின் அணு ஆயுத மையங்களையும் தாக்க முடியும் என்றார்.
அடுத்த சர்ஜிக்கல் தாக்குதலில் இந்திய விமானப்படையும் இடம்பெறும், “முழு அளவிலான தாக்குதலுக்கு விமானப்படை தயார்” எனவும் குறிப்பிட்டு உள்ளார் தனோவா. சமீபத்தில் இந்திய ராணுவப்படை தளபதி பிவின் ராவத், சீனா மற்றும் பாகிஸ்தானை குறிப்பிட்டு இருதரப்பு போருக்கு இந்திய ராணுவம் தயராகி உள்ளது என குறிப்பிட்டார்.
பிஎஸ் தனோவா பேசுகையில், இருதரப்பு போரென்றால் முழு அளவிலான தாக்குதலுக்கு 42 படை குழு வேண்டும், வரும் 2032 ஆண்டுக்குள் இந்திய விமானப்படை 42 போர் படைக்குழுவை பெறும். சீனாவையும் இந்திய விமானப்படையால் எதிர்கொள்ள முடியும். அதற்கான வலிமை இந்திய விமானப்படையிடம் உள்ளது என்றார். டோக்லாம் விவகாரம் தொடர்பாக பேசுகையில் சும்பி பள்ளத்தாக்கு பகுதியில் சீனா தன்ணுடைய ராணுவத்தை நிறுத்தி வைத்து உள்ளது, அவர்கள் தங்களுடைய நிலைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டு உள்ளார்.
-dailythanthi.com