கேரள முதல்வருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து

கேரளாவில் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமித்த கேரள முதல்வருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.கேரளாவில் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.

இதேபோன்று தமிழ்நாட்டிலும் அர்ச்சகர்களை நியமிப்பதில் மாற்றம் வேண்டும் என அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்த தொடங்கி விட்டனர். இந்நிலையில் கேரள முதல்வருக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும், வைக்கம் வீரர்க்கு வணக்கம் என டுவிட் செய்துள்ளார்.

-dailythanthi.com