ஜி.எஸ்.டி.யும், பணமதிப்பு இழப்பு நடவடிக்கையும் நல்ல சீர்திருத்தங்கள் எனவும், இந்தியா நல்ல பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும் ஐ.எம்.எஃப். தலைவர் கிறிஸ்டின் லகார்டே தெரிவித்துள்ளார்.
ஆளும் பாஜக அரசில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. பலதரப்பட்ட விமர்சனங்களைப் பெற்றுவருகின்றன. இந்நிலையில், ஐ.எம்.எஃப். என அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே, இந்த இரண்டு நடவடிக்கைகளும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நல்ல சீர்திருத்தங்கள என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “இந்தியாவின் வளர்ச்சி விகிதம் தற்போது சிறிது குறைவாக இருக்கலாம். ஆனால், இடைக்கால மற்றும் நீண்டகாலத்திற்கு ஒரு திடமான வளர்ச்சியை மேற்கொள்ளும் என்பதற்கு, சமீபகாலங்களில் அங்கு நடைமுறைக்கு வந்த சீர்திருத்தங்களே சான்று. ஜி.எஸ்.டி.யும், பணமதிப்பு இழப்பு நடவடிக்கையும் வரலாற்றில் நினைவுகூரத்தக்க நடவடிக்கைகள். அதேசமயம், அவற்றால் சில சறுக்கல்கள் ஏற்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தின” என தெரிவித்துள்ளார்.
-nakkheeran.in