தஞ்சை: சிங்கப்பூர், மலேஷியா நாடுகள் நிலவேம்பை கேட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைந்து வருவதாக தெரிவித்தார்.
நிலவேம்பு கசாயம் குடிப்பதால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது என்று விஜயபாஸ்கர் உறுதியுடன் தெரிவித்தார். ஆராய்ச்சி செய்யப்பட்ட நிலவேம்பு கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் சிங்கப்பூர் மலேஷியா உள்ளிட்ட நாடுகளும் நிலவேம்பை கேட்பதாகவும் அவர் கூறினார். பக்க விளைவுகளை ஏற்படுத்தாத நிலவேம்பு குறித்து சமூகவலைதளங்களில் யாரும் அவசரைப்பட்டு எதையும் கூறவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
டெங்கு காய்ச்சல் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இன்னும் 15 நாட்களில் தமிழகத்தில் டெங்கு இல்லாத நிலை உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.