டெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 383 போலீஸார் வீரமரணடைந்துள்ளனர் என்று உளவுத்துறை இயக்குநர் ராஜீவ் ஜெயின் தெரிவித்துள்ளார். இதில் 98 பேர் எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள்.
கடந்த ஒரு ஆண்டில் கொல்லப்பட்ட 383 பேரில் 42 பேர் ஜம்மு காஷ்மீர் போலீஸார்; 76 பேர் உ.பியைச் சேர்ந்தவர்கள்.
மேலும் எல்லைப் பாதுகாப்புப்படைச் சேர்ந்த 56 பேர், 49 சி.ஆர்.பி.எப் போலீஸார், 23 சத்தீஸ்கர் போலீஸார், 16 மேற்கு வங்க போலீஸார், பீகார் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 24 போலீஸார் வீரமரணம் தழுவியுள்ளனர்.
இதில் பெரும்பாலான போலீஸார் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டிலும், காஷ்மீர் தீவிரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட் தாக்குதல்களிலும் கொல்லப்பட்டனர். இவ்வாறு ராஜீவ் ஜெயின் கூறினார்.
தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக புள்ளிவிவரப்படி, 2015ல் 737 போலீஸார் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இதில் 38 பேர் தீவிரவாதத் தாக்குதலிலும், 36 பேர் மாவோயிஸ்ட் தாக்குதலிலும் மரணித்துள்ளனர்.