சென்னை: யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்களின் நெட்வொர்க்கில் சென்னை சேர்க்கப்பட்டு இருக்கிறது. உலகின் முக்கியமான நகரங்களுக்கும் மட்டும் அளிக்கப்படும் இந்த மரியாதை இப்போது சென்னைக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் நகரங்களை சிறப்பு மரியாதை கொடுத்து யுனெஸ்கோ பாராட்டுவது வழக்கம். ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் பழமையான நகரங்களை பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய சின்னங்கள் பலவற்றை அறிவித்து இருக்கிறது யுனெஸ்கோ. அதேபோல் தற்போது சென்னையை இந்த அமைப்பு பாராட்டி இருக்கிறது.
யுனெஸ்கோ தற்போது உலகில் இருக்கும் படைப்பாக்க நகரங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அந்த பட்டியலில் சென்னையும் இடம்பெற்று இருக்கிறது. இதனால் உலகின் முக்கிய இடங்கள் கொண்ட யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்களின் நெட்வொர்க்கில் சென்னை சேர்க்கப்பட்டு இருக்கிறது.
இசை துறைக்கு சென்னை அளித்துள்ள பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இசை துறையில் சென்னையின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் அந்த அமைப்பு பாராட்டி இருக்கிறது.
இந்தியாவில் இருந்து வாரணாசி, ஜெய்ப்பூர் நகரங்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. துபாய், மெக்சிகோ போன்ற பெரிய நகரங்களும், ஆப்ரிக்காவில் இருக்கும் சிறிய நகரங்களும் கூட சில துறை சார்ந்த சாதனைகளுக்காக இந்த பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது.
-tamil.oneindia.com