வருவாய் சரிந்ததால் ஐடி நிறுவனங்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு..!

ஐடி நிறுவனங்கள் என்ன தான் வளர்ச்சி பாதையினை நோக்கிச் செல்வதாக நமக்குத் தெரிந்தாலும் கடந்த சில காலாண்டுகளாகச் சரிவையும் சந்தித்து வந்துள்ளன.

இதுபோன்ற கடினமான சூழலை தவிர்க ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் கையாள்வது செலவுகளைக் குறைப்பது ஆகும்.

செப்டம்பர் மாதத்துடன் முடிந்த இரண்டாம் காலாண்டு முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் 0.2 முதல் 2.2 சதவீதத்திற்கு உள்ளேயே உள்ளது.

நிறுவன கையகப்படுத்துதல்

விப்ரோ, எச்சிஎல், டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் பிற நிறுவனங்களைக் கையகப்படுத்தலை தவிர்த்து வருகின்றன.

வளர்ச்சி

தற்போதைய நிலையினை வைத்துப் பார்க்கும் போது 2018-ம் ஆண்டில் இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்கள் 5 முதல் 7 சதவீதம் வளர்ச்சியினைப் பெற்று இருக்கும் என்று கூறப்படுகின்றது. அதிலும் விப்ரோ நிறுவனத்தின் வளர்ச்சி 2 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகின்றது.

செலவு குறைப்பு

ஐடி நிறுவனங்களின் இந்த வளர்ச்சி சரிவினால் செலவுகளைக் குறைக்கும் பணிகளில் இறங்கியுள்ளன. குறிப்பிட்ட அளவில் செலவுகளைக் குறைப்பதன் மூலம் வருவாய் அதிகரிக்கும், வளர்ச்சி அதிகரிக்கும் என்று ஐடி நிறுவனங்கள் நினைக்கின்றன.

பொய்யான எதிர்பார்ப்பு

2017-ம் ஆண்டு வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு போன்ற துறையில் அதிக வளர்ச்சி இருக்கும் என்று நினைத்த நிலையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.

அக்சன்சர்

ஐடி துறையினைப் பொறுத்தவரையில் அக்சன்சர் நிறுவனம் குறிப்பிட்ட அளவில் வளர்ச்சியினைப் பெற்றுள்ளது.இந்திய ஐடி நிறுவனங்கள் விலை குறைப்பு போன்றவற்றில் சிக்கி தவித்து வருகிறன.

சரியும் ஊழியர்கள் எண்ணிக்கை

எனவே ஐடி நிறுவனங்கள் தங்களிடம் உள்ள ஊழியர்களிடம் இருந்து அதிக வேலை வாங்க முடிவு செய்தது மட்டும் இல்லாமல் ஊழியர்களை எண்ணிக்கையினைக் குறைக்க முடிவு செய்துள்ளனர். அதன் வெளிப்பாடே 6 முக்கிய இந்திய ஐடி நிறுவனங்களில் சரிந்துள்ள 4,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை ஆகும்.

tamil.goodreturns.in

TAGS: