பிரபாகரன் பிறந்த நாள் விழாவில் நடிகை கஸ்தூரி!

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63வது பிறந்த நாளை, நேற்று முதல் தமிழகம் மட்டும் அல்ல உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் பலர் கொண்டாடி வருகிறார்கள். இன் நிலையில் நடிகை கஸ்தூரி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

26.11.1954 வரலாறு பிறந்த தினம் …என்று கழுத்து வரை புலிகளின் உடையை மட்டும் காட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார். சென்னையில், பல்வேறு அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடினர். அதில் பல தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒரு நிகழ்வில் திடீரென நடிகை கஸ்தூரி என்ரி கொடுத்து பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அவர் அரசியலுக்கு வர உள்ளதை இது காட்டுவதாக பலர் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் கடந்த சில மாதங்களாக அவர் பல கருத்துக்களை முன்வைக்க தயங்கவில்லை. அத்தோடு விடுதலைப் புலிகள் பற்றி தாம் கொண்டுள்ள கருத்தை நேரடியா அவர் பேசி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

-athirvu.com