பெங்களூர்: ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என்று அவரது அத்தை மகளான லலிதா தெரிவித்துள்ளார். பெங்களூரில் வசிக்கும் லலிதா, தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளதாவது: ஜெயலலிதா எனது அம்மாவின் அண்ணன் மகள். அவர் எங்கள் மாமா மகள். ஜெயலலிதாவுக்கும் ஒருவருக்கும் காண்டாக்ட் இருந்தது தெரியும். ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை. எங்கள் பெரியம்மாதான் அவருக்கு பேறுகாலம் பார்க்க உதவி செய்தார்.
வெளியே சொல்ல கூடாது
ஜெயலலிதா இந்த விஷயத்தை தெரிவிக்க கூடாது என்று சத்தியம் வாங்கி வைத்திருந்தார். 1970க்கு பிறகு ஜெயலலிதா எங்கள் குடும்பத்தாருடன் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை. குழந்தை பேறுகால நேரத்தில் மட்டுமே உதவிக்காக எனது பெரியம்மாவை அழைத்தார்.
டிஎன்ஏ டெஸ்ட்
சைலஜா ஜெயலலிதாவின் சகோதரி முறை. சைலஜாதான் அமிருதாவை வளர்த்தார் என்பதால் ஒருவேளை இதுதான் ஜெயலலிதாவின் மகளாக இருக்கலாம் என்று நினைக்கிறோம். ஆனால் அந்த குழந்தை அமிருதாவா என்று உறுதியாக தெரியவில்லை. டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் உண்மை தெரியவரும்.
சொத்துக்கு ஆசைப்படவில்லை
அமிருதா, ரஞ்சனி மூலமாக கடந்த 3 மாதங்களாகதான் தெரியும். என்னை அத்தை என்று கூப்பிடுகிறார். அமிருதா மனதில் தனது அம்மா ஜெயலலிதா என்று நினைக்கிறார். ஐயங்கார் முறைப்படிதான் ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கு நடைபெற வேண்டும் என்று அமிருதா விரும்புகிறார். சொத்துக்காக அவர் ஆசைப்படுவதை போல தெரியவில்லை.
மனிதாபிமான உதவி
ஜெயலலிதா அரசியல் களத்திற்கு போன பிறகு நாங்கள் அவரை சந்திக்கவில்லை. 1980களில் ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது. அப்போதே, ஜெயலலிதா தாய் சத்யா இறந்துவிட்டதால், மனிதாபிமான அடிப்படையில் எனது பெரியம்மா பேறுகாலம் பார்க்க சென்றார். அதேநேரம், இதற்காக எங்களிடம் எந்த ஆவணமும் இல்லை. அமிருதாவை டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் மட்டுமே அது ஆவணமாக அமையும். இவ்வாறு லலிதா தெரிவித்துள்ளார்.
ஆமாம் உண்மைதான் சோபன் பாபு நடிகனை திருமணம் செய்த பின்பு பிறந்த குழந்தை நடிகர் எல்லாருக்கும் தெரிந்த விசியம்தானே>>>
உண்மை வெளிவருவது காலத்தின் கட்டாயம்.
இது நமக்கு மிகவும் முக்கியமான விஷயம் ! நமது தமிழனின் சரித்திரத்தில் எழுத பட வேண்டியது ! அவள் ஒரு தே……..! மானங் கேட்ட ஒரு மாநிலத்தின் ! மறைந்த தலைவரின் வப்பாட்டி ! ஏழைகளை சுரண்டி சேர்த்த திருட்டு சொத்துக்கு அதிபதி ! நாட்டை பிடித்த பீடை ஒழிந்தது என்று தலை முழுகு வதை விட்டு போட்டு ! செம்பருத்தி உமக்கும் வேறு வேலையும் ! சேதியும் இல்லையா!!
ஐயா s . maniam அவர்களே— ஜெயலலிதாவை சாடுவதில் எந்த பயனும் இல்லை– அவளும் ஒரு சாதாரண பெண்– அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார்? அவளின் காலை தொட்டு கும்பிட தமிழ் நாட்டின் நாதாரிகளின் எண்ணிக்கை எவ்வளவு? இதை நானோ நீங்களோ தமிழ் நாட்டில் சொல்லி இருந்தால் இந்நேரம் நாடே அல்லோலகல்லோலம் தான். நம்முடைய தலையை வாங்க புறப்பட்டு இருப்பார்கள். அவளை அம்மா அம்மா என்று அவளின் புகை படத்தை கையில் ஏந்தியும் பச்சை குத்தியும் தங்களின் மட்டரக புத்தியை பறை சாற்றி கொண்டிருக்கின்றார்கள். அவளின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவது அவ்வளவு சரி இல்லை என்பது என் தாழமையான கருத்து. அவள் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்து இருந்தால் பாராட்டலாம் — அதுவும் இல்லை– என்ன இலவச ஜந்துகள் தமிழ் நாட்டில் அதிகம்– ஆனால் அங்கு ஒழுங்கான சாலைகள் கூட கிடையாது– இது பற்றி நான் முன்பே கூறி இருந்தேன்- என்ன பயன்? இப்போது குழம்பிய குட்டையைமீன் பிடிக்க மோடி OPS – EPS ஊழல்வாதிகளை கைக்குள் போட்டு காயை நகர்த்துகிறான்