நியூட்ரினோ திட்டத்தை விரைந்து செயல்படுத்த மோடி உத்தரவு!

நீண்ட நாட்களாக செயல்படுத்தப் படாமல் இருக்கும் நியூட்ரினோ திட்டத்தை துரிதமாக செயல்படுத்த தமிழக அரசுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அணுவைவிட மிகச்சிறிய துகள்களான நியூட்ரினோ துகள்களை ஆராய்ச்சி செய்யும் முயற்சி கடந்த 10 ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தை தேனி மாவட்டத்தில் செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்தத் திட்டத்தால் இடுக்கி, முல்லைப்பெரியாறு அணைகள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள நீராதாரங்கள் பாதிக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மாசு கட்டுப்பாடு வாரியம் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தடை விதித்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நியூட்ரினோ திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய அரசு தரப்பில் இருந்து தடைகள் ஏதேனும் இருந்தால், அதனை அகற்ற மத்திய அமைச்சரவை செயலாளர் ஏ.கே.சின்காவிற்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

-nakkheeran.in

TAGS: