மீன்கள் ஏன் கரை ஒதுங்கியது, வெளிவரும் ஆய்வின் அதிர்ச்சி தகவல்..!!

தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் கடற்கரை கிராமத்தில், கடலோரத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் தூண்டில் வளைவு பாலம் உள்ளது…இங்கு திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் தூண்டில் வளைவு பாலத்திற்கு அருகே சுமார் 40 சிறிய, பெரிய அளவிலான டால்பின் மீன்கள் கரை ஒதுங்கின.

இதனைதொடர்ந்து தற்போது,எதற்காக இந்த டால்பின் கரை ஒதுங்கி  உள்ளது என ஆய்வு செய்ய தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் திடீரென சென்னை கடற்கரை மீன்கள் கரை ஒதுங்கியது…
இதனை கண்ட மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மக்களின் பயத்தை அதிகரிக்கும் விதமாக  இது நடந்துள்ளது.,.

ஆண்டு தோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பொதுவாகவே  ஏதாவது ஒரு இயற்கை சீற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதால் மக்கள் தற்போது அச்சத்தில் உள்ளனர்

கீழ் உள்ளபடம், அடையார் முகத்துவாரத்தில் இனப்பெருக்கத்திற்காக வந்த மடவை வகை மீன்கள், கழிவு நீர் அதிகமாகி ஆக்‌ஷிஜன் இல்லாத காரணத்தால் லட்சக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.

ஆக்‌ஷிஜன் பற்றாக்குறைக்கு காரணம்..?

சென்னை அடையாறு மலர் மருத்துவமனை அருகே உள்ள பாலத்தின் பக்கவாட்டில் பழைய பாலத்தின் மேலாக செல்லும் கழிவு நீர் குழாய்களில், உள்ள உடைப்புகள் வழியாக பல மாதங்களாக நேரடியாக அடையாற்றில் கலக்கும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர்.

இந்த கழிவு நீர் கலக்கும் இடத்திற்கு மிக அருகாமையில் தான் அடையாறு கடலில் கலக்கும் முகத்துவாரம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த இடத்தில் தான் மீன்கள் செத்து மிதக்கின்றன. ஒரு புறம் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை நீர்நிலைகளில் கலப்பது மறுபுறம் குழாய்களில் உடைப்பு எற்படுத்தி தினமும் கழிவுநீரை நேரடியாக ஆற்றில் கலப்பது போன்ற அரிய சாதனைகளை செய்வது வேறு யாருமல்ல நமது சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம் தான்.

அதிகாரிகள் யாராவது நடவடிக்கை எடுப்பார்களா..?  நம்மீது தவறை வைத்து கொண்டு இயற்கை மீது பழி  போடுவது சரியா..?

ஆனால் மீன்கள் கொத்துகொத்தாக செத்து கிடப்பது முக்கிய அறிகுறியே..?  இயற்கையை நாம் வஞ்சித்து வருகிறோம்..

-athirvu.com

TAGS: