அகமதாபாத்,
குஜராத் மாநிலம் சர்க்கார்கா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
குஜராத்தில் நான் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால் பல ஆண்டுகளாக பல காங்கிரஸ் தலைவர்கள் என்னை விமர்சனம் செய்து வருகின்றனர்.
அவர்கள் ஏன் என்னை வெறுக்கிறார்கள்? ஏன் என்றால் நான் ஒரு நீச்…நான் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். குஜராத்தில் நான் தாழ்த்தப்பட்டவர். ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த நபருக்கு அவர்கள் நிறைய தொல்லைகளைத் தருகிறார்கள். பொது வாழ்வில் நாம் சொல்ல வேண்டிய விஷயங்கள் இவைதானா? என கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் தலைவர்கள் எனக்குப் பயன்படும் மொழியில் உள்ள நியதி எங்கே? இந்த தகுதிக்கு நான் என்ன செய்தேன்? இந்தியாவில் உள்ள மக்கள் என்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது தான் என் குற்றமாகும்.
காங்கிரஸ் தினமும் என்னை தவறாக விமர்சிக்கிறது. இருந்தாலும் நான் அமைதியாக செல்கிறேன் ஏன் என்றால் எனக்கு வேலை தான் முக்கியம்.
இவ்வாறு பிரதமர் மோடி கண்ணீர் மல்க பேசினார்.
-dailythanthi.com
நீங்கள் தாழ்த்தப்பட்டவர் என்றால்….? புரியவில்லையே! உங்கள் காலத்தில் தானே தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பலர் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள்? அவர்கள் எல்லாம் யார்?