எங்கள் படம் ரிலீஸ் 25, தமிழ் ராக்கர்ஸில் 26ம் தேதி படம் லீக்- இப்படி ஒரு ஃபஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு

தமிழ் சினிமாவில் படங்கள் ரிலீஸ் ஆனதும் தமிழ் ராக்கர்ஸ் என்ற வலைதளத்தில் உடனே படம் வெளியாகிவிடும். இதனால் தயாரிப்பாளர் சங்கமும் அந்த வலைதளத்தை முடக்க நிறைய முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மிர்சி சிவா நடிக்கும் தமிழ்ப்படத்தின் இரண்டாம் பாக ஃபஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. அந்த போஸ்டரில் எங்களுடைய படம் அடுத்த வருடம் மே மாதம் 25ம் தேதி ரிலீஸ் என்றும் தமிழ் ராக்கர்ஸில் 26ம் தேதி ரிலீஸ் என்றும் போட்டுள்ளனர்.

அதோடு பைரசி பார்ட்னர் தமிழ் ராக்கர்ஸ் என்றும் போட்டுள்ளனர். இந்த ஃபஸ்ட் லுக் தற்போது ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

-cineulagam.com