சண்டிகார்,
சீக்கியர்கள் கட்டயமாக மதமாற்றம் செய்யப்படும் விவகாரத்தை பாகிஸ்தான் அரசிடம் எடுத்துச் செல்லுமாறு பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அம்ரிந்தர் சிங், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம் வலியுறுத்தி உள்ளார்.
கைபர் பக்துன்கவா மாகாணத்தில் சீக்கியர்கள் கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யப்படுகிறார்கள், இவ்விவகாரத்தை உடனடியாக பாகிஸ்தான் அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டும். கைபர் பக்துன்கவா மாகாணம் ஹன்கு மாவட்டத்தில் சீக்கிய சமூதாயத்தினர் இஸ்லாமிய மதத்திற்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் எந்தஒரு விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது என்பதை உறுதிசெய்ய வேண்டியது இந்திய அரசின் பணியாகும்.
பாகிஸ்தானில் சீக்கியர்கள் இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்யப்படும் விவகாரத்தில் இந்திய அதிகாரிகள் தலையிட வேண்டும் என்பது பொறுப்பாகும், அங்கு நடைபெறும் மதமாற்றத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அம்ரிந்தர் சிங் வலியுறுத்தி உள்ளார்.
பாகிஸ்தானில் நடந்துவரும் “மத சித்திரவதையை” முடிவுக்கு கொண்டுவர உயர்மட்ட அளவில் இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
மனிதர்கள் அனைவருக்கும் மத சுதந்திரம் உள்ளது, மனிதநேய அடிப்படையில் உலக நாடுகள் அனைத்தும் அதனை உறுதிசெய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளார் அம்ரிந்தர் சிங்.
-dailythanthi.com