டெல்லி : நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் பெருநகரங்களில் சென்னை முதலிடம் வகிப்பதாக மத்திய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரத்தில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. நாட்டில் உள்ள 6 பெருநகரங்களில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அதில் பெண்களுக்கு பாதுகாப்பான பெருநகரத்தில் சென்னை முதலிடம் வகிக்கிறது. சென்னயில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
லட்சம் பெண்கள் வசிக்கும் சென்னையில் 544 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1 லட்சம் பெண்களில் 15 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருப்பதாக மத்திய குற்ற ஆவணங்கள் காப்பகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 75.8 லட்சம் பெண்கள் வசிக்கும் டெல்லியில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் 1 லட்சம் பெண்களில் 182 பர் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பாதுகாப்பான நகரம் பட்டியல் சென்னை முதலிடத்திலும், மும்பை இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதே போன்று கொல்கத்தா 3வது இடத்திலும் பெங்களூரு 5வது இடத்திலும் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மோசமான நகராமாக டெல்லி உள்ளதாக குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.