அனிதாவின் சகோதரருக்கு அரசுப்பணி! ஆணையை வழங்கினார் முதல்வர்!

அரியலூரில் தற்கொலை செய்த அனிதாவின் சகோதரருக்கு சுகாதாரத்துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.  அரசுப்பணிக்கான ஆணையை சகோதர் சதீஷ்குமாரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.  மேலும், 7 லட்சத்திற்கான நிவாரணத்தை அனிதாவின் தந்தையிடம் வழங்கினார் முதல்வர் பழனிச்சாமி.  சென்னை தலைமைச்செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி சண்முகத்தின் மகள் அனிதா.  பிளஸ்-2 தேர்வில் அனிதா 1200க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.  ஆனால் நீட் தேர்வு முடிவில் இவர் 700க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மருத்துவ படிப்பு வாய்ப்பு கிடைக்கவில்லை.  பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்திருந்தால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.  நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேரமுடியாமல் போன விரத்தியினால் அனிதா தற்கொலை செய்துகொண்டார்.   தமிழகத்தையே உலுக்கியது அனிதாவின் மரணம்.

அவரது மரணத்திற்கு நிவாரணமாக 7 லட்சத்திற்கான நிவாரணத்தை இன்று அனிதாவின் தந்தையிடம் வழங்கினார் முதல்வர் பழனிச்சாமி. அனிதாவின் சகோதரருக்கு சுகாதாரத்துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.  அரசுப்பணிக்கான ஆணையை சகோதர் சதீஷ்குமாரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

-nakkheeran.in

TAGS: