திருவனந்தபுரம்,
இந்தியாவில் 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலம், முன்னேற்ற நிலை மற்றும் உயர் சமூக வளர்ச்சி குறியீடு ஆகியவற்றை கொண்டது என்ற பெருமையை பெற்றது கேரளா.
இந்த நிலையில், கேரள போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2007ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான 10 வருட காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 365 ஆக பதிவாகி உள்ளது.
அவற்றில் கற்பழிப்பு வழக்குகள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 755 ஆக உள்ளது. இந்த வழக்குகளில் பெண்கள் தொடர்புடையவை என 11 ஆயிரத்து 325ம், குழந்தைகள் தொடர்புடையவை என 5 ஆயிரத்து 430ம் உள்ளன.
கடந்த 2007ம் ஆண்டில் இருந்து 2017ம் ஆண்டு வரையில் இந்த எண்ணிக்கையானது மும்மடங்காக உயர்ந்துள்ளது. 2007ம் ஆண்டில் 500ம், 2008ம் ஆண்டில் 548ம், 2009ம் ஆண்டில் 554ம், 2010ம் ஆண்டில் 617ம், 2011ம் ஆண்டில் 1,132ம், 2012ம் ஆண்டில் 1,019ம், 2013ம் ஆண்டில் 1,221ம், 2014ம் ஆண்டில் 1,347ம், 2015ம் ஆண்டில் 1,256ம், 2016ம் ஆண்டில் 1,656ம் மற்றும் 2017ம் ஆண்டில் (செப்டம்பர் வரை) 1,475ம் கற்பழிப்பு வழக்குகளாக பதிவாகியுள்ளன.
இதேபோன்று இந்த வருடம் பெண்களுக்கு எதிராக பதிவாகியுள்ள பல்வேறு குற்றங்களின் எண்ணிக்கை 11,001 ஆக உள்ளது. அவற்றில் 3,407 பாலியல் வன்முறை, 147 கடத்தல், 9 வரதட்சணை மரணம், 2,452 கணவன் மற்றும் உறவினர்களால் துன்புறுத்தல் மற்றும் 3,222 பிற குற்றங்கள் ஆகியவை அடங்கும்.
இந்த வருடம் அதிக எண்ணிக்கையிலான கற்பழிப்பு வழக்குகள் திருவனந்தபுரம் (கிராமம்) 157, மலப்புரம் 136 மற்றும் பாலக்காடு 105 ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளன.
அதேவேளையில், கேரளாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் மொத்த எண்ணிக்கை கடந்த 10 வருடங்களில் 16,624 ஆக உள்ளது.
இந்த வருடம் ஜூலை வரையில் 2,581 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் அவற்றில் 825 கற்பழிப்பு வழக்குகளாக உள்ளன.
-dailythanthi.com
அழகு ஆபத்தானது, அதே வேளையில் உ,யர்ந்த மதிப்புகொண்டது, அதனை பாதுகாப்பா வைச்சிகுணும், கண்டமாரி திறந்து போட்டுக்கிட்டு திரிய கூடாது, ஆடு,மாடு மட்டும் மேயாது, நாயும், எலியுங்கூட உஸ்ஷா அடிச்சிருமே!