ரத்த தானம் அளிக்கும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை- மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களிடம் ரத்ததானம் தொடர்பான விழிப்புணர்வை பெருக்கும் விதமாக ரத்ததானம் செய்தால் ஊதியத்துடன் கூடிய ஊதியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலத்துறையின் சேவை விதிகளின்படி, தற்போதைய நிலையில், ஊழியர்கள் ரத்த தானம் செய்தால், அவர்களுக்கு அன்று விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த திட்டத்தை யாரும் முறையாக பயன்படுத்தாத நிலையில், புதிய சலுகைகளுடன் மீண்டும் இத்திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், ரத்தத்தின் பகுதிப்பொருட்களான சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, நுண்தட்டுக்கள் தானம் செய்பவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

இதற்கான ஆணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் வேலைநாளில் அங்கீகரிக்கப்பட்ட ரத்தவங்கிகளில் ரத்த தானம் அல்லது ரத்தத்தின் பகுதிப்பொருட்கள் தானம் செய்ததற்கான ஆதாரத்தை அளித்தால், அன்றைய நாளை, சிறப்பு சாதாரண விடுமுறையாக கருதி, அவர்களுக்கு அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும். தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து, ஆண்டிற்கு 4 முறை, அவர்கள் இந்த சலுகையை பெற முடியும் என்று பணியாளர் அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-tamil.oneindia.com

TAGS: