ஜம்மு,
எல்லைப் பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பிற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக எல்லையில் பாகிஸ்தான் நிலைகளை இந்தியா துவம்சம் செய்தது.
காஷ்மீர் எல்லையில் சம்பா செக்டாரில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது. பாகிஸ்தானின் இந்த அடாவடி தாக்குதலில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் தலைமை கான்ஸ்டபிள் ஆர்.பி. ஹஸ்ரா உயிரிழந்தார். பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாதிகளுக்கு உதவிசெய்யும் பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதலை நடத்திவருகிறது. எல்லைப் பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பிற்கு பதிலடியாக இந்திய ராணுவம் எல்லையில் அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது. எல்லையில் பாகிஸ்தானின் நிலைகள் துவம்சம் செய்யப்பட்டது.
நேற்று இரவு இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 10 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர் என தகவல்கள் தெரிவித்து உள்ளன.
எல்லைப் பாதுகாப்பு படையின் ஐஜி ராம்வதார் பேசுகையில், “பாகிஸ்தான் ராணுவம் நேற்று எல்லையில் அத்துமீறி நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார். பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது, இதில் பாகிஸ்தான் நிலைகள் துவம்சம் செய்யப்பட்டது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டமைப்புகள், ஆயுதங்கள் பெரும் அழிவை சந்தித்து உள்ளது. பாகிஸ்தான் நிலைகள் பெரும் இழப்பை சந்தித்து உள்ளது,” என கூறிஉள்ளார்.
-dailythanthi.com