தனது ரசிகர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். தன் அரசியல் பிரவேசம் மீதான நீண்டகால எதிர்பார்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த அவர், உண்மையான, நேர்மையான, ஆன்மீக அரசியலை அமைக்கவேண்டும் எனக்கூறினார்.
அவரது அரசியல் பிரவேசம் ஒருபுறம் இருக்க, அவர்கூறிய ஆன்மீக அரசியல் மிகப்பெரிய வாதங்களை உருவாக்கியது. அவர்கூறிய ஆன்மீக அரசியலுக்கு பல விளக்கங்களும் கொடுக்கப்பட்டன.
இந்நிலையில், 1995ஆம் ஆண்டு தனது பிறந்தநாளான 12 மற்றும் 13ஆம் தேதிகளில் நடிகர் ரஜினிகாந்த் தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில் ஆன்மீகம் – அரசியல் ஒப்பிடுக? என்ற கேள்விக்கு, ‘அந்த இரண்டையும் ஒப்பிட முடியாதுங்க (சிரித்தபடி), ஒப்பிடவும் கூடாது. ஏன்னா, ரெண்டுமே பாம்பும் கீரியும் மாதிரி. எதிரெதிர் துருவங்கள்’ என பதிலளித்துள்ளார்.
ஆன்மீகம் அரசியல் இரண்டும் எதிரெதிரானவை என அன்று கூறிய ரஜினி, இன்று அதை இணைத்து எந்தமாதிரியான அரசியல் செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
-nakkheeran.in
மோடி சொல்றான் , இந்த ரஜினி செய்யறான் ! ஏன்னா ரஜினிக்கு மண்ணாங்கட்டிடையே தெரியாது இதுல அரசியலா ? BABA கௌன்டிங் ஸ்டார்ட்ஸ் …… (மோதலை இந்த மாதிரி ரஜினி சொன்னதை வேத வாக்க பாக்கிறாய்ங்களே , அவனை ஒதைக்கணும் !)
அடாடா! எப்போவோ பேசி மறந்து போனதை எல்லாம் ஒன்னு ஒன்னுனா கொண்டாராங்காப்பா! எப்படியோ ரஜினியின் ராசி உச்சத்தில் இருக்கிறதாம்! அதனால் அவர் துணிச்சலோடு இருக்கிறார்! நடக்கட்டும்!
ஜய்யா Dhilip2 மோடி சொல்லான்
இந்த ரசினி செய்றான்,
அப்படின்னா சொந்தப்புத்தி
இல்லையா?தலைதான் சொட்டை
உள்ளேயும் சொட்டையா?தமிழ்
நாடு விளங்கிடும்,பத்திரிக்கை
நிருபர்களை கண்டாலேபயம்
தாத்தாவுக்கு!