புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென போர்க்கொடி உயர்த்தினர். வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் செய்தியாளர்களிடம் கூட்டாக தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்துள்ள இந்த நீதிபதிகளின் மோதல் போக்கு, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு முன்னாள் நீதிபதிகள் சாவந்த், சந்துரு, ஏ.பி.ஷா, சுரேஷ் உள்ளிட்ட நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
புதிய விதிமுறைகளை வகுக்கும் வரை 5 மூத்த நீதிபதிகளுக்கு முக்கிய வழக்குகளை ஒப்படைக்க வேண்டும். மேலும் ஒருசில நீதிபதிகளிடம் மட்டும் முக்கிய வழக்குகளை ஒப்படைக்கக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
-dailythanthi.com