சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி பலவிதமான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது.
இவர் தமிழன் இல்லை, சமூகபிரச்சனைக்கு குரல்கொடுக்கவில்லை என்ற விமர்சனம் அதிகம் வருகிறது.
அந்தவகையில் நடிகர் மன்சூர் அலிகான் கூறுகையில், ரஜினிகாந்த் 100 கோடிக்கும் மேல் வசூலாகும் படத்தில் நடிப்பதில் தான் அந்த பில்டப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இங்கு ஏதாவது மாற்றவேண்டும் என்று விரும்பினால் இத்தனை வருடம் என்ன செய்து கொண்டிருந்தார். கட்சி தொடங்கி தான் நல்லது செய்யவேண்டுமா என்று கூறியுள்ளார்.
ஆந்திராவில் 20க்கும் மேற்பட்ட தமிழர்களை சுட்டுக்கொன்றபோது முதல்வர் சந்திரபாபு நாயுடு நண்பர் தானே கேட்டிருக்கலாம். அந்த தைரியம் இருக்கா? என்று விளாசியுள்ளார்.
-cineulagam.com