பல்லாயிரம் மைல் பறந்து கோடியக்கரை வரும் பறவைகள்

கோடியக்கரை சரணாலயத்தில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை வெளிநாட்டுப் பறவைகள் குவிகின்றன.

வடகிழக்கு பருவமழை தாமதமானதால் தற்போது பறவைகள் வரத்தும் தாமதமானது.

ஆர்ட்டிக் பகுதியிலிருந்து உள்ளான், ஐரோப்பாவிலிருந்து கடல் ஆலாக்கள் & கடல் காகம், ஈரானிலிருந்து பூனாரை உள்ளிட்ட பறவைகள் பல்லாயிரம் மைல்கள் பறந்து கோடியக்கரை சரணாலயம் வந்துள்ளன.

செங்கால்நாரை, கரண்டிமூக்குநாரை, கூழைக்கிடா, சிறவி வகைகள், கொசு உள்ளான், வெள்ளை அருவாய் மூக்கன், கருப்பு அருவாய் மூக்கன் போன்ற பறவைகளும் வந்துள்ளன.

காலையிலும் மாலையிலும் கோடியக்காடு சதுப்பு நிலப்பகுதியில் அவற்றைப் பார்க்க முடியும். -BBC_Tamil

TAGS: