தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கவே் கிடைக்காது… சுப்பிரமணியன் சுவாமி ஆரூடம்

டெல்லி: தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

காவிரியில் இருந்து ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீரை திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசோ வெறும் 111 டிஎம்சி தண்ணீரை மட்டுமே திறந்துள்ளது. மீதமுள்ள 82 டிஎம்சி நீரை திறந்து விட கர்நாடகா மறுப்பு தெரிவித்துள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளில் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் காவிரியில் நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக நேரம் ஒதுக்குமாறு கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எந்த பதிலும் வரவில்லை

அவரும் சந்திப்புக்கான நேரம் வழங்குவது பரிசீலனை செய்து வருவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். எனினும் இதுவரை அதற்கு கர்நாடக அரசு தரப்பில் இருந்து எந்த வித பதிலும் வரவில்லை.

சுப்பிரமணியன் சுவாமி

இதனால் காவிரி விவகாரத்தில் நாளை புதிய வழக்கை தொடர தமிழக அரசு உத்தேசித்துள்ளது. இந்நிலையில் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

நான் செய்வேன்

அப்போது அவர் கூறுகையில் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்கவே கிடைக்காது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஓபிஎஸ், ஈபிஎஸ் என்னிடம் கேட்டால் நான் ஏற்பாடு செய்வேன்.

இத்தாலியில் இருந்து

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இத்தாலியில் இருந்து என்னால் 3 மாதத்தில் கொண்டு வரமுடியும் என்றார் சுப்பிரமணியன் சுவாமி. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விட முடியாது என்று அந்த மாநில அமைச்சர் பாட்டீல் கூறியது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: