போலி 2000 ரூபாய் நோட்டுக்களை இந்திய எல்லைப் பாதுகாப்பு படை பறிமுதல் செய்து உள்ளது

கொல்கத்தா,

பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் எல்லையில் இந்தியாவின் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களின் கள்ள நோட்டுக்கள் சிக்குவது வழக்கமாக உள்ளது.

பாகிஸ்தானில் கள்ளநோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வங்காளதேசம் வழியாக இந்தியா வருகிறது எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ச்சியாக கள்ள நோட்டுக்கள் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கைகள் இருந்து வருகிறது.

இப்போதும் போலி ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மால்டா மாவட்டம் சாப்தால்பூரில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை ரூ. 1,94,000 மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்து உள்ளது. இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

-dailythanthi.com

TAGS: