கைதிகள் எண்ணிக்கை குறைவு, 5 கிளைச்சிறைகளுக்கு மூடுவிழா..

தெலுங்கானா மாநிலத்தில் மத்திய சிறைகள் தவிர்த்து சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்களை அடைக்க 35 கிளைச்சிறைகள் செயல்பட்டு வருகின்றது. இதில், நிஸாமாபாத், வாரங்கால், கம்மம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 கிளைச்சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால் அவற்றை மூட அம்மாநில சிறைத்துறை முடிவு செய்துள்ளது.

மாநில அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளால் குற்றங்களில் ஈடுபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சிறைத்துறை டி.ஜி.பி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் மேலும் 3 கிளைச்சிறைகளை மூட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் முயற்சியிலும் சிறைத்துறை ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 100 பெட்ரோல் பங்க்குகள் மற்றும் சிறு தொழில் ஏற்படுத்தி தருதல் ஆகியவை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களில் உள்ள கைதிகளை அடைக்க மூடப்பட்ட சிறைகளை வாடகைக்கு விடும் திட்டத்தையும் அரசுக்கு சிறைத்துறை பரிந்துரை செய்துள்ளது.

-athirvu.com

TAGS: