சென்னையில் துப்பாக்கி முனையில் 69 ரவுடிகள் கைது

சென்னையில் துப்பாக்கி முனையில் நள்ளிரவில் 69 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வீச்சரிவாள்கள், 35 கத்திகள், 8 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை வண்டலூர் அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரவுடிகள் ஒன்று கூடியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு வாகன சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது துப்பாக்கி முனையில் 69 ரவுடிகள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து வீச்சரிவாள்கள், 35 கத்திகள், 38 டூ வீலர்கள், 8 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ரவுடிகள் அனைவரும் ரகசிய இடத்தில் வைத்து போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

tamil.oneindia.com

TAGS: