இந்திய பொருளாதாரத்திற்கு வங்கிகள் முதுகெலும்பு என்றால் மிகையாகாது. நாட்டில் இருக்கும் பெரிய வங்கிகளின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு துணை நிற்பது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என்பதை நாம் மறுக்க முடியாது.
எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க ஆப் பரோடா போன்ற வங்கிகளில் தற்போது வராக்கடன், பண மோசடிகளின் மூலம் அதிகளவில் பாதித்துள்ளதை போல, NBFC எனக் கூறப்படும் சிறிய நிதி நிறுவனங்கள் பணச் சலவை விதிகளை மீறியுள்ளதாகவும், இவ்வங்கிகள் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளதாகவும் சுமார் 9,500 வங்கிகளைப் பட்டியலிட்டுள்ளது நிதியமைச்சகம்.
பணமதிப்பிழப்பு..
மோடி அரசு அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் தடை காலத்தில் இந்தியாவில் இருக்கும் பல ஆயிரம் NBFC மற்றும் கிராம கூட்டுறவு வங்கிகள் பல்வேறு மோசடிகளைச் செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பின்பு இந்த NBFC மற்றும் கிராம கூட்டுறவு வங்கிகள் செய்த பணப் பரிமாற்றங்கள், வர்த்தக நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய அமலாக்க துறை முடிவு செய்தது.
வைப்பு நிதி
அமலாக்கத் துறையின் அதிரடி சோதனையில் இந்த NBFC மற்றும் கிராம கூட்டுறவு வங்கிகள் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட காலத்தில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொண்டு அதை வைப்பு நிதியாகப் பின் தேதியில் பதிவு செய்யப்பட்டுப் பண மோசடிக்கு வழி வகுத்துள்ளது.
சோதனை
பணச் சலவை தடுப்பு சட்ட விதிகளின் படி அனைத்து NBFC நிறுவனங்களும் 10 லட்சத்திற்கும் அதிகமாகச் செய்யப்பட்ட பரிமாற்றங்கள் குறித்து நிதி நுண்ணறிவு பிரிவுக்குத் தகவல்களைக் கொடுக்க அதிகாரியை நியமிக்கப்பட்டுள்ளது.
9,500 NBFC நிறுவனங்கள்
இப்படிப் பணச் சலவையில் ஈடுபட்டுள்ள சுமார் 9,500 NBFC நிறுவனங்கள் அருண் ஜேட்லி தலைமையிலான நிதியமைச்சகம் ஆதீத ஆபத்தான நிதி நிறுவனங்கள் என அறிவித்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் நிறுவனங்களின் மொத்த பட்டியலையும் நிதி நுண்ணறிவு பிரிவு வெளியிட்டுள்ளது.
மக்களின் கவனத்திற்கு
நிதி நுண்ணறிவு பிரிவு பட்டியலில் இருக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் உங்கள் பணம் இருந்தால் அதன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். தற்போது வங்கி பிரிவில் பல அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
9,500 நிதி நிறுவனங்கள்
ஆபத்தில் 9,500 நிதி நிறுவனங்கள்.. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அருண் ஜேட்லி..!