மும்பை: மதுபோதையில் இறந்த ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு எதற்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் ஸ்ரீதேவி உயிர் இழந்தார். முதலில் மாரடைப்பு என்றார்கள் பின்னர் தான் அவர் குடிபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. ஸ்ரீதேவியின் உடல் ஒரு வழியாக நேற்று இரவு மும்பை கொண்டு வரப்பட்டது.
மாநில அரசு
குடிபோதையில் விழுந்து இறந்த ஸ்ரீதேவியின் உடல் மீது நம் தேசியக் கொடியை போர்த்தி மாநில அரசு மரியாதை செய்துள்ளது. இதை பார்த்து பலரும் கோபப்பட்டுள்ளனர்.
ஸ்ரீதேவி
மதுபோதையில் இறந்தவருக்கு எதற்கு மாநில அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு செய்ய வேண்டும். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நெட்டிசன்ஸ் கொந்தளித்துள்ளனர்.
கேரளா
மதுபோதையில் இறந்தவரால் கேரளாவில் மது இறந்த செய்தி இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டதாகவும் மக்கள் குமுறுகிறார்கள். ஸ்ரீதேவி என்ன செய்தார் என்று இவ்வளவு முக்கியத்துவம் அவருக்கு என்று மக்கள் கேட்கிறார்கள்.
நடிப்பு
சம்பளத்தை வாங்கிக் கொண்டு நடித்தார். அவர் தொழிலை அவர் ஒழுங்காக செய்ததற்காகவா இவ்வளவு முக்கியத்துவம் என்று மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.
விமர்சனம்
குடிபோதையில் விழுந்து இறந்தவரை கொண்டாடுவார்கள் ஆனால் ஒரு வேளை சோறு கிடைக்காமல் போன மதுவை அடித்துக் கொன்றதை யாரும் கண்டுகொள்ளக் கூட மாட்டார்களா என்று சமூக வலைதளங்களில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.