நான் ரொம்பப் பிஸி.. சிபிஐ சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.. நீர்வ மோடி அடாவடியான பதில்..!

இந்திய வங்கி துறையின் மீது இருந்த நம்பிக்கை இன்று காணாமல் போயுள்ளது என்றால் இதற்கு முக்கியமான காரணம் நீரவ் மோடி செய்த 12,600 கோடி ரூபாய் மோசடி தான்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி மோசடி செய்தது மட்டும் அல்லாமல் தற்போது விஜய் மல்லையா போலவே இவரும் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் சிபிஐ இவருக்கு மின்னஞ்சல் மூலம் சமன் அனுப்பியுள்ளது, இதற்கு அவர் அளித்துள்ள பதில் என்ன தெரியுமா..?

தலைமறைவு வாழ்க்கை

நீரவ் மோடி தனது மோசடி குறித்த செய்தி வெளியாகும் என முன்கூட்டியே தெரிந்துகொண்டு வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹூல் சோக்ஸி ஆகியோரி இணைந்து கிடத்தட்ட 20,000 கோடி ரூபாய் அளவிலான பணத்தைப் போலி LoU மூலம் மோசடி செய்துள்ளனர்.

வெளிநாட்டில் தஞ்சம்..

20,000 கோடி ரூபாய் மோசடியில் முக்கியக் குற்றவாளியாக இருக்கும் நீரவ் மோடி வெளிநாட்டில் சென்றுள்ள உறுதியாகியுள்ள நிலையில் இதுவரை எங்க உள்ளார் என்பது அரசுக்குத் தெரிவிக்கவில்லை.

சிபிஐ இந்நிலையில் சிபிஐ அமைப்பு வழக்கின் விசாரணைக்கு நேரடியாக வருமாறு நீரவ் மோடி பயன்படுத்தி வரும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. இதற்கு அவர் கூறிய பதில் தான் அதிர்ச்சி அளித்துள்ளது.

சிபிஐ

இந்நிலையில் சிபிஐ அமைப்பு வழக்கின் விசாரணைக்கு நேரடியாக வருமாறு நீரவ் மோடி பயன்படுத்தி வரும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. இதற்கு அவர் கூறிய பதில் தான் அதிர்ச்சி அளித்துள்ளது.

பதில்

எனக்கு இங்குப் பிஸ்னஸ் வேலைகள் உள்ளது. ஆதனால் வர முடியாது எனச் சிபிஐக்குப் பதில் அளித்துள்ளார். இதற்கு மறு பதில் அளித்த சிபிஐ, நீங்கள் இருக்கும் நாட்டில் உயர் இந்திய அலுவலகத்திற்குச் சென்றால் போதும், நீங்களே உங்களை இந்தியாவிற்கு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.

கட்டாயம்

இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் நேரடியாக வர வேண்டும் என்பது கட்டாயம் எனவும் சிபிஐ தனது மறுபதில் மின்னஞ்சலில் தெவித்துள்ளது.

ப்ளூ கார்னர் நோடீஸ்

தற்போது நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி ஆகியோர் மீது ப்ளூ கார்னர் நோடீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நபரைத் தேடிப்பிடித்து, கிரிமினல் விசாரணையின் கீழ் தகவல்களைப் பெற உரிமை அளிப்பது. இந்த நோட்டீஸ் பிப்.22 முதல் ஒரு வருடத்திற்கு நடைமுறையில் இருக்கும்.

இண்டர்போல்

இந்நிலையில் நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி ஆகியோரை கண்டுபிடித்து, இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள சிபிஐ இண்டர்போல் அமைப்பை ரெட் கார்னர் நோட்டீஸ் அறிவிக்கக் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

திவால்

மேலும் அமெரிக்காவில் இருக்கும் நீர்வ மோடியின் நிறுவனம் இந்த மோசடிக்கு பின்பு திவால் ஆனதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

tamil.goodreturns.in

TAGS: