லிங்காயத்துகளுக்கு விரைவில் தனிமத அங்கீகாரம்- பச்சை கொடி காட்ட போகும் சித்தராமையா

பெங்களூர்: லிங்காயத்துகள் தனிமத கோரிக்கை பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு தற்போது அறிக்கை சமர்பித்து இருக்கிறது. கடந்த 6 மாதங்களாக இந்த குழு ஆய்வு செய்து வந்தது. கர்நாடகாவில் இருக்கும் லிங்காயத்துகள், தங்களை இந்துக்கள் இல்லை தனி மதம் என்று அறிவிக்க கோரி இருந்தார்கள். தங்களை வீர சைவர்கள் என்று அறிவிக்க வேண்டும் கோரி இருந்தார்கள். இதற்காக இவர்கள் கடந்த வருடம் போராட்டம், பேரணி நடத்திக் கொண்டு இருந்தனர். கர்நாடகாவில் லிங்காயத்துகள் தேர்தல் முடிவுகளை மாற்றுவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்.

ஏற்றார்கள்

பொதுவாக லிங்காயத்துகள் பாஜக கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த நிலையில், சித்தராமையா அவர்களை தன் வசம் இழுத்தார். லிங்காயத்துகளின் தனி மத கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கினார். ஆனால் பாஜக இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இது காங்கிரஸ் கட்சிக்கு பலத்தை சேர்த்தது.

என்ன குழு

இந்த நிலையில் லிங்காயத்துகள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது. முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி என் எஸ் நாகமோகன் தாஸ், பேராசிரியர் ராமகிருஷ்ண மாராதே, ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் இருக்கும் கன்னட மொழி இருக்கையின் தலைவர் புருஷோத்தமன் பிலிமன் ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டார்கள்.

சமர்ப்பித்தார்கள்

இவர்கள் கடந்த 6 மாதமாக லிங்காயத்துகள் குறித்து ஆராய்ச்சி நடத்தினார்கள். அதன்படி தற்போது இவர்கள் அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறார்கள். கடந்த 2ம் தேதி இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் அரசு ஒப்புதல் வழங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

தேர்தல் திட்டம் ஏற்கனவே கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கியுள்ளது. தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவு அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது லிங்காயத்துகள் ஆதரவு அவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது அம்மாநில தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

tamil.oneindia.com

TAGS: