மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு கோயில் உருவாகிறது

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 388-வது பிறந்த நாள் விழா நேற்று மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தானே மாவட்டம் பிவாண்டி-வாடா சாலையில் உள்ள துகத் பாட்டாவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அம்மாநில மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ‘மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பெருமையை போற்றும் வகையில் அவருக்கு முதல் முறையாக தானேயில் கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கோயில் புகழ்பெற்ற வஜ்ரேஷ்வரி கோயிலுக்கு அருகில் அமைக்கப்பட உள்ளது. இது இளைஞர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும்’ என கூறினார்.

இந்த விழாவில் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிவாஜிக்கு அமைக்கப்பட உள்ள கோயிலின் மாதிரி படம் வெளியிடப்பட்டது. மேலும், மேள தாளங்கள் முழங்க சிவாஜியின் வீரத்தை நினைவுகூறும் வகையில் பாடல்கள் பாடப்பட்டன.

-athirvu.com

TAGS: