அனாதைக் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய முதல்-மந்திரி

மத்தியப்பிரதேசம் மாநில முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்றுக் காலை தனது 59-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு காலை முதல் பல அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி, நிதிமந்திரி அருண் ஜெட்லி, குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி, அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், பி.ஜே.பி கட்சி தலைர் அமித் ஷா, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி, ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இராணி மற்றும் பல தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், முதல்-மந்திரி சிவ்ராஜ் தனது பிறந்தநாளை போபாலில் உள்ள அனாதை இல்லத்தில் கொண்டாடினார். அங்குள்ள அனாதை குழந்தைகளுடன் சிரித்து பேசினார். மேலும், குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார். அங்குள்ள குழந்தைகள் முதல்-மந்திரியுடன் மகிழ்ச்சியாக உரையாடினர்.

-athirvu.com

TAGS: