டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டது என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்து இருக்கிறார்.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில் அதனை சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது.
கர்நாடகத்துக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவு. மேலும் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஆனால் கர்நாடகாவில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மத்திய பாஜக அரசு இதில் முடிவெடுக்காமல் இருக்கிறது. இந்த நிலையில் 4 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், துறை செயலாளர்களை வைத்து, காவிரி தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து, டெல்லியில் வரும் 9-ம் தேதி கூட்டம் கூட்டப்பட உள்ளது.
இதையடுத்து தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டது என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் ”மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும் திட்டம் இல்லை. ஆங்கில ஊடகங்களில் தவறான தகவல் வந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம்.” என்றுள்ளார்.
மேலும் ”தீர்ப்பில் உள்ளதை அப்படியே செயல்படுத்துவோம். மேலாண்மை வாரியம் அமைக்கவே 4 மாநில கூட்டம் நடக்க உள்ளது. வாரியம் குறித்த அறிவிப்பு அப்போது வெளியாகும்” என்றுள்ளார்.
தொடங்கி விட்டது! ஆனால் முடிவை முடக்கி விடுவோம்! ‘வாரிவிடுவோம்!’ அது தான் எங்கள் வாரியத்தின் வேலை!