கர்நாடக மாநிலத்திற்கு தனிக்கொடி அறிமுகம்.. சித்தராமையா அதிரடி.. பாஜகவுக்கு செக்

பெங்களூர்: கர்நாடக மாநிலத்துக்கென தனிக்கொடியை முதல்வர் சித்தராமையா அறிமுகம் செய்து வைத்தார்.

நீண்ட நாட்களாக தங்களுக்கென்று தனி கொடி வேண்டும் என்று கர்நாடக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. தேசியக் கொடி இருந்தாலும் எங்களுக்கென்று தனிக் கொடி வேண்டும் என்று கோரி வந்தது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்துக்கென்று தனிகொடியை முதல்வர் சித்தராமையா இன்று அறிமுகம் செய்தார். இந்த கொடி மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது. முன்னதாக கர்நாடக கொடியை உருவாக்க ஒரு குழுவை உருவாக்கியிருந்தார் சித்தராமையா.

இந்திய கொடியை போலவே மூவர்ணங்களை கொண்டதாக உள்ளது இந்த கொடி. மேலே மஞ்சள் நிறமும், நடுவே வெள்ளை நிறமும், கீழே சிவப்பு வண்மும் கொண்டதாக உள்ள இந்த கொடியின் நடு பகுதியில் கர்நாடக மாநில அரசின் சின்னம் இடம்பெற்றுள்ளது.

தேர்தல் நெருங்கும் நெரத்தில் இந்த கொடியை வைத்து பாஜகவுக்கு செக் வைக்க சித்தராமையா முயலுகிறார் என கூறப்படுகிறது. கொடிக்கு அனுமதி கொடுப்பதை பாஜக விரும்பாத நிலையில், இதை வைத்து கன்னடர்களிடம் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை கொண்டு செல்வது சித்தராமையா திட்டம் என கர்நாடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

tamil.oneindia.com

TAGS: