12 வயதுக்கு கீழான சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று நேற்று ராஜஸ்தான் சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. இன்னும் சில நாட்களில் அரியானாவிலும் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் கர்நாடகா, மராட்டியம் ஆகிய மாநிலங்களும் இந்த சட்டத்தை அமல்படுத்தும் முனைப்பில் இருக்கிறது.
இந்த புதிய சட்டம் குழுவாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு பொருந்தும். குழுவாக 12 வயதுக்கு கீழான சிறுமிகளை பலாத்காரம் செய்தால், அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும் என இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தது 14 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மத்தியபிரதேசத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டபோதே அதற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-athirvu.com