இந்திய, மத்திய, மாநில அரசு வேலையில் சேர விரும்பும் நபர் குறைந்தது ஐந்து ஆண்டுகள் கட்டாயமாக ராணுவத்தில் சேவையாற்றி இருக்க வேண்டும் என்ற பரிந்துரையை தயார் செய்ய பாராளுமன்ற நிலைக்குழு மத்திய பணியாளர் பயிற்சித்துறையை கேட்டுக்கொண்டுள்ளது.
முதலில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இதற்கான பரிந்துரை அளிக்க கேட்டதாகவும், அதில் திருப்தி இல்லாததால் தற்போது மத்திய பணியாளர் பயிற்சித்துறையிடம் பாராளுமன்ற நிலைக்குழு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராணுவத்தில் உள்ள பணியிடங்கள் பற்றாக்குறையை இந்த திட்டம் நிரப்பும் என பாராளுமன்ற நிலைக்குழு கருதியுள்ளது. மேலும், ராணுவப்பயிற்சி அளிக்கப்படுவதால் அதிகாரிகள் நேர்மையுடன் அரசுப்பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-athirvu.com