ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்ககோரி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ராமர் பாலத்தை இடிப்பதால் மத நம்பிக்கை பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் என்பதால் ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அவர் தனது மனுவில் வலியுறுத்தி இருந்தார். ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படுத்தாமல் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
-athirvu.com