மோடி அரசு 4 வருட ஆட்சியில் பணமதிப்பிழப்பால் மக்களுக்கும், ஜிஎஸ்டியால் வர்த்தகர்களுக்கும், அரசு திட்டங்களின் தொடர் தோல்வியின் காரணமாக பொருளாதார வளர்ச்சியில் தொய்வு என பல இருந்தாலும் தொடர்ந்து ஆட்சியை காப்பாற்றி வருகிறது. தற்போது இந்த நிலை மோசமடைந்துள்ளது.
தொடர்ந்து தோல்வி
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 282 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை அமைத்தது. பாஜக ஆட்சியில் அமர்ந்த பின் நடைபெற்ற 17 லோக்சபா இடைத் தேர்தல்களில் பாஜக 3-ல் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. 2014-ல் வீசியதாக சொல்லப்பட்டு மோடி அலை புஷ்வானமாகி உள்ளது.
ஆந்திர பிரதேசம்
இந்நிலையில் ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மோடி அரசு கொடுத்த நம்பிக்கையை உடைத்தது மட்டும் அல்லாமல் ஆந்திர முதல்வரின் இக்கோரிக்கை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உதாசினப்படுத்தியுள்ளார்.
கோபம்
இதில் கோபமடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயடு, மத்தியில் இருக்கும் இரு அமைச்சர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். இந்த முடிவுக்கு ஆந்திர மாநிலத்தின் எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது.
நம்பிக்கையில்லா தீர்மானம்
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் எதிர்கட்சியான YSR காங்கிரஸ் இணைந்து மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.
ஆதரவு
மோசடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி மற்றும் YSR காங்கிரஸ் கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கம்யூனிஸ்ட், திரிணமுல் காங்கிரஸ், தமிழ்நாட்டில் அதிமுகவை தவிர பிற அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. அதே சமயம் காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அதிமுக எம்பிக்களும் பாஜக மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கடந்த ஒரு வாரமாக கொடுக்கும் பேட்டிகள் மத்திய அரசு மீதான அதிருப்தியின் வெளிப்பாடுகள்தான்.
மோடிக்கு கடும் எதிர்ப்பு
மத்திய அரசுக்கு எதிராக தென்னிந்திய மாநில கட்சிகள் ஒன்று கூடி இருக்கிறது. கூடுதலாக உ.பி, மேற்கு வங்க மாநில கட்சிகளும், இடதுசாரிகளும் இதில் கைகோர்த்து இருக்கின்றன.
50 ஆண்டுகள்
மத்திய அரசு எதிராக அழுத்தமான எதிர்ப்பு தென்னிந்தியாவில் போடப்பட்டு இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு பின் திராவிட நாடு கொள்கைக்கு இணையாக மாநில கட்சிகள் ஒன்று சேர்ந்து இருக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்
2014 பொதுத்தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. லோக்சபாவில் பாஜகவிற்கு 282 எம்பிகள் இருந்தனர். ஆனால் இடைத்தேர்தல்களுக்குப் பின்னர் பாஜகவின் பலம் 272ஆக சரிந்துள்ளது.
மிகப்பெரிய வீழ்ச்சி
மோடி அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தென் இந்திய மாநிலங்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பல வட மாநில கட்சிகளும் ஆதரவும் அளிக்கிறது. இதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் மோடி அரசுக்கும் பிஜேபி கட்சிக்கும் எதிராக நிற்கிறது இதனை எப்படி சமாளிக்கப்போகிறது.
முக்கிய பிரச்சனை
வங்கி மோசடிகளில் இருந்து மீண்டும் பங்குச்சந்தைக்கு தற்போது இந்தியாவில் நிலவும் அரசியல் பிரச்சனைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 550 புள்ளிகள் வரையில் சரிந்தது.
நேரத்திற்கும் மேடைக்கும் ஏற்றபடி நாடகமாடும் வித்தையை இந்திய அரசியல்வாதிகளுக்குச் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. ப.ஜ.க. இந்துத்துவாவை தெற்கே உபயோகிக்க ஆரம்பித்ததால் இவர்கள் மீண்டும் திராவிட நாடு என்று கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டனர். கீரைக்கடைக்கும் எதிர்கடை வேண்டுமென்பார்கள் அல்லவா அதைப் போல இவர்கள் இந்திய அரசியல் காயை நகர்த்த ஆரம்பித்து விட்டனர்.
அதனை பொதுசன ஊடகங்கள் ஊதி பெரியதாக்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழ் நாட்டில் தினகரன் ‘திராவிடம்’ என்னும் சொல்லை அவர் கட்சியின் பெயரில் சேர்க்காமல் புறக்கணித்துள்ளதால் அவர் தமிழ் தேசியத்தை முன்னெடுக்க வழிகோலுவார் என்ற எதிர்பார்ப்பு தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ளது.
அதை முறியடிக்க தி.மு.க. அகன்ற திராவிட நாடு அமைப்புக்கு ஆதரவளிக்குமென்று ஸ்டாலின் அறிக்கை விட்டிருப்பது தமிழ் தேசியத்தை மழுங்கச் செய்வதற்கு ஒரு மாற்று வழியாகக் கருதுகிறார் போலும். நடக்கட்டும் இவர்தம் அரசியல் நாடகம்.
மோடி அரசாங்கம் செய்வது எவ்வளவு பிழையோ , அதற்கு நிகராக மக்கள் செய்வதும் தவறு. அதாவது GST யை அறிவித்தது மோடி அரசின் மிக பெரிய குற்றம் என்றால் , வெறுமனே ஆடு மாடுகளை போல் குட்டி மட்டும் போட்டு கொண்டு இருக்கும் இந்தியர்களை என்ன சொல்வது ? ஒவ்வொரு குட்டிக்கும் இலவச மருத்துவம் முதல் இலவச திருமணம் வரை அரசை எதிர்பார்த்து காத்திருத்தல் எவர் குற்றம் ? அறிவியல் மற்றும் புத்தாக்க கண்டு பிடிப்பில் நாம் பின் தங்கி உள்ளோம் . உலகத்திற்கு தேவையான கண்டுபிடிப்புக்களை செய்தால் இந்திய உற்பத்தி திறன் பெருகும் , ஆனால் அதில் கவனம் இல்லை ! 14 கோடி ஜப்பானியர்கள் 15 trillion உற்பத்தி திறன் வைத்திருப்பதும் , 120 கோடி மக்கள் 3 . 3 trillion உற்பத்தி திறன் வைத்திருப்பதும், நம் இந்தியர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஓடும் ….. படிப்பது வேலைக்கு மட்டும் என்று எண்ணுவது தவறு ! உற்பத்தி திறனும் புத்தாக்க முயற்சியும் , அறிவியல், தகவல் தொழில் நுட்பம் , மருத்துவத்தில் நாம் உலக சாதனை செய்யலாம் ! ஆனால் இல்லையே ….. உதாரணத்திற்கு : கர்நாட்டாக இசையை ஒரு உலக அளவில் மாணவர்களை கையாளும் பல்கலை கழகம் செய்யலாம் ! அல்லது மூலிகை மருத்துவம் BAMS பட்ட படிப்பை , உலக அளவில் பிரிட்டனில் அமெரிக்காவில் ரஷ்யாவில் சீனாவில் என்று உலக தர வரிசையில் பல்கலை கழகங்கள் நிறுவலாம் ! இப்படி நிறைய உள்ளது . ஆனால் மக்கள் திருந்தால் 80 கோடி இந்தியர்கள் அன்றாட காட்சிகளாகத்தான் இருப்போம் !
தமிழக ஊடகங்கள் தமிழர்கள் கையில் இல்லை. அவர்கள் திராவிடம் என்று சொல்லுவதைதான் விரும்புகிறார்கள் அதனால் தான் கமலைப் பார்த்து, தினகரனைப் பார்த்து வரப்போகிற ரஜினியைப் பார்த்து இப்போதே ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்கள்!. திராவிடம் இனி தமிழ் நாட்டில் அழியும்!
இந்திவெறி இந்துவெறி இவை இரண்டும் இருக்கும் வரை இந்தியா உருப்பட போவதில்லை .ஆங்கிலம் தொடர்பு மொழி தாய்மொழி முதல் மொழி இந்தி விருப்பமொழி எனும் நிலைக்கு வட இந்தியன் ஏற்றுக்கொள்ளும் வரை ஒன்றுபட்ட இந்தியா நிலைக்க வழியில்லை .சோவியத் நாடு நிலை ஏற்படும் .